பாவனைக்கு உதவாத பேருந்து தரப்பிடம் யாழில் இடித்தழிப்பு
jaffna
bus
stand
By Vanan
யாழ். மாநகர சபைக்குகுட்பட்ட பாவனைக்கு உதவாத பேருந்து தரப்பிடமொன்று மாநகரசபையால் இன்று இடித்து அகற்றப்பட்டது.
யாழ். இந்துக் கல்லூரியின் கோரிக்கைக்கு அமைவாக, கல்லூரி மைதானத்திற்கு அருகில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருந்த பாவனைக்கு உதவாத பஸ் தரிப்பு நிலையம் யாழ். மாநகர முதல்வரின் பணிப்பிற்கு அமைவாக அகற்றப்பட்டது.
குறித்த பஸ் தரிப்பு நிலையத்தில் பல சமூகவிரோத செயற்பாடுகள் நடைபெறுவதாக குறித்த பகுதி மக்களால் நீண்ட நாட்களாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த பஸ் தரிப்பு நிலையம் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



1ம் ஆண்டு நினைவஞ்சலி