வெள்ளத்தில் சிக்கிய யாழில் இருந்து சென்ற பேருந்து - வெளிநாட்டுப் பெண் உட்பட 67 பயணிகள் மீட்பு

Jaffna Weather Floods In Sri Lanka Flood
By Thulsi Nov 29, 2025 05:48 AM GMT
Report

புதிய இணைப்பு

அனுராதபுரம் - புத்தளம் சாலையில் உள்ள கலாவெவ பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து அருகிலுள்ள வீட்டின் கூரையில் ஏறிய வெளிநாட்டுப் பெண் உட்பட 67 பயணிகளையும் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.

நேற்று (28) சுமார் 70 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வெள்ளப்பெருக்கு காரணமாக பாலத்தில் சிக்கிக் கொண்டது.

முதலாம் இணைப்பு

அநுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கலா ​​ஓயா அருகே ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியது.

அவர்களில் 34 பேர் தற்சமயம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களே அவதானம் - A9 வீதியில் நீரில் அடித்துச் சென்ற கார் - இருவர் பலி

மக்களே அவதானம் - A9 வீதியில் நீரில் அடித்துச் சென்ற கார் - இருவர் பலி

சிகிச்சைகளுக்காக அனுமதி 

பாதுகாப்பாக மீட்கப்பட்டவர்கள் நொச்சியாகம வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படவுள்ளனர். 

வெள்ளத்தில் சிக்கிய யாழில் இருந்து சென்ற பேருந்து - வெளிநாட்டுப் பெண் உட்பட 67 பயணிகள் மீட்பு | Bus With Around 70 Passengers Stuck Bridge

இந்த மீட்பு நடவடிக்கையின் நேரடி காட்சிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (29) அதிகாலை கண்காணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தில் இருந்தவர்கள் அங்குள்ள வீடொன்றின் கூரையின் மீது தங்கியிருந்தனர்.

இந்த மக்களை மீட்கும் நடவடிக்கையை கடற்படை முன்னெடுத்திருந்தது.

உலுக்கும் சீரற்ற காலநிலை - யாழில் காற்றுடன் தொடர் மழை - ஒருவர் பலி

உலுக்கும் சீரற்ற காலநிலை - யாழில் காற்றுடன் தொடர் மழை - ஒருவர் பலி

மீட்புப் பணி

நேற்று (28) இரவு நீரின் வேகம் காரணமாக அவர்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது.

வெள்ளத்தில் சிக்கிய யாழில் இருந்து சென்ற பேருந்து - வெளிநாட்டுப் பெண் உட்பட 67 பயணிகள் மீட்பு | Bus With Around 70 Passengers Stuck Bridge

கடற்படையின் செயற்பாட்டுக் கப்பல் தொகுதி, இலங்கை கடற்படை நீச்சல் பிரிவு, விசேட படகுப் படைப் பிரிவு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மேலதிகப் படையினரும் இந்த மீட்புப் பணிகளில் இணைந்தனர்.

இந்த மீட்பு நடவடிக்கையின் நேரடிக் காட்சிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (29) அதிகாலை கண்காணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வந்த இந்திய மீட்பு குழு

இலங்கை வந்த இந்திய மீட்பு குழு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026