பெருந்தொகை பெட்ரோலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் அதிரடி கைது!
பொலன்னறுவ - மீகஸ்வேவ பகுதியில், உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக 604 லீற்றர் பெட்ரோலை பதுக்கி வைத்திருந்த வணிகர் ஒருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 70 வயதான சில்லறை கடை உரிமையாளர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மெடிரிகிரியாவில் உள்ள மீகஸ்வேவ காவல்துறை பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
எரிபொருள் பதுக்கல்கள்
சந்தேக நபர் சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் இருந்து பெற்ற பெட்ரோலை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

பெட்ரோல் தட்டுப்பாடு நிலவும் காலங்களில் அதிக விலைக்கு விற்கும் நோக்கத்தில் இந்த எரிபொருள் பதுக்கல்கள் செய்யப்பட்டதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (19) ஹிங்குரகொட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தபடவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |