முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி
உள்நாட்டு சந்தையில் முட்டையின் விலையை ஸ்திரப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் ரமலான் மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகைக் காலங்களில் சந்தையில் முட்டை விலையை ஸ்திரப்படுத்தவும் மற்றும் கேக் உள்ளிட்ட பேக்கரித் தொழிலுக்குத் தேவையான முட்டைகளை வழங்கவும் வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சர்கள் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சந்தைப்படுத்தல் வலையமைப்பு
அத்தோடு, (2024-03-18) திகதியிட்ட அமைச்சரவை தீர்மானத்தின் படி இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் இதுவரை 224 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அவற்றில் 95% லங்கா சதொசவின் சந்தைப்படுத்தல் வலையமைப்பு மூலம் 37 ரூபாய் என்ற மலிவு விலையில் நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் (2024-04-30) அன்று முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |