விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்: மின்கட்டண குறைப்பு தொடர்பாக அமைச்சரவை பத்திரம்
விவசாய தேவைகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய நடவடிக்கைகளில் பெரும் முயற்சியுடன் அனைத்துப் பணிகளையும் முன்னெடுக்கும் வடமாகாண மக்களின் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அபிவிருத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் போது அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தின் பெரும்பகுதியை வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கே ஒதுக்க வேண்டும் என அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணங்களுக்கு நிவாரணம்
வடமாகாணத்தில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அந்த பிரச்சனைகளுக்கு மத்தியிலும் அவர்கள் விவசாயத்தை கைவிடவில்லை.
எனவே வடமாகாண விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளுக்கு மின்சாரத்தை பயன்படுத்தும் போது ஓரளவு நிவாரணம் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கமைவாக விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் மின்சாரக் கட்டணங்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்கும் வகையில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |