கேபிள் கார் வேலைத்திட்டம் - அதிகாரிகளுக்கு ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள பணிப்புரை
Ranil Wickremesinghe
By Kiruththikan
நுவரெலியாவில் கேபிள் கார் வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று (22) காலை நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது, இந்த பணிப்புரை விடுக்கப்பட்டதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உலக முடிவைப் பார்வையிடும் வகையில், பட்டிப்பொல மற்றும் பொரலந்தைக்கு இடையில் கேபிள் கார் செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு அதிபர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்

3ம் ஆண்டு நினைவஞ்சலி