அரசை கடுமையாக விமர்சித்து வருபவருக்கு கோட்டாபயவிடம் இருந்து வந்த அழைப்பு
ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தை ஆட்சி கட்டிலில் அமர்த்த பெரிதும் பாடுபட்டவரும் தற்போது அரசின் செயற்பாடுகளில் கடும் விரக்தியுற்று அரசாங்கத்தை கடுமையாக விமர்ச்சித்து வருபவருமான அபயராம விகாரையின் விகாராதிபதி முத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் தனது விகாரையில் மகிந்தவிற்கு அரசியல் செய்ய இடம்கொடுத்தவரே முத்தெட்டுவ ஆனந்த தேரர். இவர் ஆளும்பொதுஜன பெரமுனவை ஆட்சிக்கட்டிலில் ஏற்ற அயராது பாடுபட்டவராவார்.
இந்த நிலையில் அண்மைக்காலமாக அரசின் செயற்பாட்டில் விரக்தியுற்று கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்தநிலையிலேயே முருந்தெட்டுவே ஆனந்த தேரருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அழைப்பு கிடைத்துள்ளது.
இதற்கமைய, ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபயவினால் தேரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை இந்த அழைப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.