தயாராகவே உள்ளோம் - கோட்டாபயவுக்கு முக்கிய அமைச்சர் கொடுத்த பதிலடி

Wimal Weerawansa Vasudeva Nanayakkara Udaya Gammanpila Gotabaya Rajapaksa
By Chanakyan Dec 29, 2021 07:21 AM GMT
Report

மனச்சாட்சிக்கு அமைவாக செயற்பட்டுள்ள காரணத்தினால் அமைச்சு பதவிகளை துறக்க வேண்டிய அவசியம் கிடையாது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பினை மீறியுள்ளோம் என அரச தலைவர் கருதினால் எம்மை தாராளமாக அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து விலகியதன் பின்னர் அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கலாம் என அரச தலைவர் குறிப்பிட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,  

யுகதனவி மின்நிலையம் தொடர்பிலான ஒப்பந்தம் முறையற்றதாகும் என்ற உண்மையை நாட்டு மக்களுக்கும், நீதிமன்றத்திற்கும் பகிரங்கப்படுத்தியுள்ளோம். மனச்சாட்சிக்கு அமைய செயற்பட்ட காரணத்தினால் அமைச்சு பதவிகளில் இருந்து விலக வேண்டிய அவசியமில்லை.

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் அமைச்சரவை அனுமதியுடன் முறையாக கைச்சாத்திடப்படவுமில்லை.

ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் அமைச்சரவைக்கு தெளிவுப்படுத்தப்படவுமில்லை என்பதை அமைச்சரவை உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் நாட்டு மக்களுக்கும், நீதிமன்றிற்கும் அறிவித்தோம்.

அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் போது அமைச்சு பதவிகளை இழக்க நேரிடும் என்பதை நன்கு அறிவோம்.

அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை காட்டிலும் மனச்சாட்சிக்கமைய நாட்டுக்காக செயற்பட வேண்டும் என்ற காரணத்தினால் யுகதனவி விவகாரத்திற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.

மனச்சாட்சிக்கமைய செயற்பட்டுள்ள காரணத்தினால் அமைச்சு பதவிகளை துறக்க வேண்டிய அவசியம் கிடையாது. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பினை மீறியுள்ளோம் என அரச தலைவர் கருதினால் எம்மை தாராளமாக அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கலாம். அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை காட்டிலும் மனச்சாட்சிக்கமைய செயற்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் முறையற்ற வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அமைச்சரவை அமைச்சர்களான உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தொடர்ச்சியாக கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் வகையில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை வலுவற்றதாக்குமாறு கோரி பல்வேறு தரப்பினர் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்களாக உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கர, விமல் வீரவன்ச ஆகியோர் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களுக்கு சார்பாக உயர்நீதிமன்றிற்கு சமர்ப்பித்துள்ள சத்தியகடதாசி அரசியலமைப்பிற்கு முரணானது என சட்டமாதிபர் மனுக்களை பரிசீலனை செய்யும் ஐவர் கொண்ட பூரண நீதியரசர்கள் முன்னிலையில் கடந்த 17 ஆம் திகதி சுட்டிக்காட்டத்தக்கது.

ReeCha
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026