கனடாவில் மற்றுமொரு தீவிரவாதி : இந்தியாவின் அறிவிப்பால் பரபரப்பு
மற்றுமொரு பயங்கரவாத அமைப்பினைச் சேர்ந்தவர் கனடாவில் வசிப்பதாக இந்தியாவின் மத்திய உள் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அந்தவகையில், கனடாவில் வசிக்கும் லக்பீர் சிங் லண்டா என்ற 34 வயதுடையவரையே தீவிரவாதி என இந்தியாவின் மத்திய உள் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.
இந்திய - கனடா உறவுகளில் விரிசல்
அவரது கொலைக்கும் இந்தியாவிற்கும் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதன்போது, இந்த கொலைக்கும் இந்தியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என இந்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது.
அதுமாத்திரமல்லாமல் இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான தூதரக உறவுகளில் விரிசல் உருவானது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில், கனடாவில் வசிக்கும் லக்பீர் சிங் லண்டா (34) தீவிரவாதி என மத்திய உள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மர்ம நபர்களால் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார், சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னு, காலிஸ்தான் புலிப்படை உள்ளிட்ட காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுடன் லண்டா தொடர்பு வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது
தவிரவும் இந்த லண்டா, பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) என்ற காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், டார்ன் டார்ன் மாவட்டத்தைப் பிறப்பிடமாக கொண்டவர் எனவும் குறிப்பிடப்படுகிறது.