கனடாவில் சுட்டெரிக்கும் வெயில் - ஒரே வாரத்தில் 719 பேர் பலி! தொடரும் துயரம்
கனடாவில் சுட்டெரிக்கும் வெயில் - ஒரே வாரத்தில் 719 பேர் உயிரிழத்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கனடா நாட்டின் மேற்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ந்து வெப்ப அலை வீசி வருகிறது.
அங்குள்ள லிட்டன் என்கிற கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இதுவரை இல்லாத வகையில் 49.6 செல்சியஸ் டிகிரி வெப்பம் பதிவானது.
தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்ப நிலையால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மேலும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கொரோனோ தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் வெயிலின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் உயிரிழந்து வருகின்றனர்.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,