இலங்கையை உலுக்கிய டித்வா புயல் : கனடாவிடமிருந்து ஒரு மில்லியன் நன்கொடை
இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயல் வெள்ளப் பேரழிவுக்கு அவசர நிவாரணமாக, கனடா தனது ஆரம்ப கட்ட மனிதாபிமான உதவியாக 1 மில்லியன் கனேடிய டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த நிதியுதவி நம்பகமான சர்வதேச பங்காளர்கள் மூலம் தற்காலிக கூடாரங்கள், தூய்மையான குடிநீர், சுகாதார சேவைகள் மற்றும் பிற அத்தியாவசிய உதவிகள் மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது.
அத்துடன் கனடா, இலங்கையின் நிலைமையை நெருக்கமாக கவனித்து வருவதாகவும், தேவைகள் அதிகரிக்கும் போது தொடர்ந்தும் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
பேரிடரில் பாதிக்கப்பட்ட சமூகங்கள்
இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதில் கனடா உறுதியாக உள்ளது. மனிதாபிமான சவால்களை சமாளிக்க சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து செயற்படுவோம் என கனடா வலியுறுத்துகிறது.

இலங்கையில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இந்த உதவி பெரும் ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |