கனடாவில் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கவுள்ள இலங்கை மாணவர்கள்
Ali Sabry
Shanakiyan Rasamanickam
Canada
By Sumithiran
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கனடாவுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களால் இந்நாட்டு பிள்ளைகள் கனடாவில் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான பிரச்சினை அந்த இரு நாடுகளாலும் நீண்டகாலமாக காப்பாற்றப்படும் என்றும், அதன் நடுவில் குதித்து தேவையற்ற அறிக்கையை வெளியிட்டு இலங்கையுடன் இராஜதந்திர சிக்கலை அலி சப்ரி உருவாக்கியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கனேடிய தூதரகத்திற்கு முன்பாக குவிந்துள்ள இளைஞர்கள்
இன்றும் கொழும்பில் உள்ள கனேடிய தூதரகத்திற்கு முன்பாக பெருமளவிலான இளைஞர்கள் விசாவிற்காக காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி