சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதித்த கனடா!
கனடாவில் அதிகரிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்க அந்த நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மாணவர்களின் வதிவிடம் தொடர்பில் பதிவாகும் முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மாணவர்கள்
வெளிநாட்டவர்களை வரவேற்பதில் நற்பெயரைக் கொண்ட கனடா, சர்வதேச மாணவர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கைக்கான வரம்பை நிர்ணயித்தது.
இதன்படி, 2024 ஆம் மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில், அனைத்து மாகாணங்களும் கூட்டாக சர்வதேச மாணவர் எண்ணிக்கையை 35 வீதத்தால் குறைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அதிக வருவாய்
வெளிநாட்டு மாணவர்கள் கனடாவின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு வருவாய் ஈட்டும் ஆதாரமாக உள்ளனர்.
உள்நாட்டு மாணவர்களைப் போலல்லாமல், அவர்களின் கல்வியானது மாகாணங்களால் கட்டுப்படுத்தப்படவில்லை என கனடா குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
கனடாவின் சனத்தொகை
கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில், கனடாவின் சனத்தொகை 40 மில்லியனை எட்டியது.
பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் குடியேற்ற கொள்கைகள் காரணமாக சனத்தொகை இவ்வாறாக அதிகரித்தது.
அத்துடன், வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |