புற்று நோயாளிகளுக்கு ஏற்பட்ட நிலை : பழுதடைந்தது கதிர்வீச்சு இயந்திரம்
Cancer
Hospitals in Sri Lanka
By Sumithiran
காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவில் உள்ள கோபால்ட் எனும் புற்றுநோய் கதிர்வீச்சு இயந்திரம் பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கதிரியக்க சிகிச்சை தேவைப்படும் புற்றுநோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை மருந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவி கலன்சூரிய தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலை பணிப்பாளர் வெளியிட்ட தகவல்
இது தொடர்பில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் எஸ்.டி.எம்.ரங்கா கூறுகையில்,

கோபால்ட் இயந்திரமே பழைய இயந்திரம். இந்த இயந்திரம் அடிக்கடி செயலிழக்கிறது. கடந்த 7ஆம் திகதி இந்த இயந்திரம் பழுதடைந்துள்ளதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.
கொழும்பில் இருந்து
இந்த இயந்திரத்தை சரி செய்ய கொழும்பில் இருந்து வர வேண்டும். அடுத்த வாரத்துக்குள் இந்த இயந்திரத்தை சரி செய்து விடலாம் என்றார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்