கட்டுநாயக்கவில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த பயணப்பொதியில் இருந்த அதிர்ச்சிகர பொருள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்டு சென்றிருந்த பயணப்பொதியொன்றில் இருந்து ரூ.110 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்டு செல்லும் பயணப்பொதிகளை மாற்றும் அலுவலகத்தில் இருந்த பயணப்பொதியொன்றிலிருந்தே குறித்த கஞ்சா தொகை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அந்த பயணப்பொதியில் 11 கிலோகிராம் 367 கிராம் கஞ்சா இருந்ததாகவும், அதன் மதிப்பிடப்பட்ட மதிப்பு ரூ. 113,670,000 என்றும் சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்க பணிப்பாளருமான சந்தன புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
கஞ்சா தொகை
இவ்வாறு கஞ்சா கண்டுபிடிக்கப்பட்ட பயணப்பொதியானது, மார்ச் 17 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு மாற்றப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதன்படி, அதில் கண்டெடுக்கப்பட்ட கஞ்சா தொகை நேற்று (17) காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்