மின்சாரம், குடிநீர் கட்டணம் செலுத்த முடியவில்லை : எம்.பிக்களின் வீடுகளில் குவியும் மக்கள்
மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்துவதில் தாம் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவித்து அமைச்சர்களின் வீடுகளுக்கு வந்து குறைகளை தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தேவைகளுக்காக வீடுகளுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் மின்சாரக் கட்டணம், தண்ணீர் கட்டணம் குறித்த கேள்விகளுடன் வருவதாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.
உரிய நேரத்தில் மின்கட்டணம் செலுத்தாததால்
உரிய நேரத்தில் மின்கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட ஏராளமான வீடுகளின் உரிமையாளர்களும் உதவியை எதிர்பார்த்து தினமும் வருவதாக குறிப்பிடுகின்றனர்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க,
மின்சாரக் கட்டணம் குறித்த கேள்விகளுடன்
மின்சாரக் கட்டணம் குறித்த கேள்விகளுடன் வீட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், மக்கள் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் அந்த விடயங்களுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |