300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து கார் விபத்து : ஒருவர் படுகாயம்
Sri Lanka Police
Nuwara Eliya
Accident
By Raghav
நுவரெலியாவில் (Nuwara Eliya) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து, நுவரெலியா, நல்லத்தண்ணி - கினிகத்தேனை பிரதான வீதியில் இன்றைய தினம் (22.042025) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், காரில் ஏற்பட்ட தொழினுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 300 அடி பள்ளத்தில் கார் விழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்தவர் லக்ஷபான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையின் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி