கெஹெலிய செய்த காரியத்தால் அவதியுறும் மட்டக்களப்பு மக்கள்...நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஷ் கண்டனம்!
மட்டக்களப்பு (Batticaloa) போதனா வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்ட இதய நோய் சத்திர சிகிச்சை இயந்திரம் வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ்,கண்டனம் வெளியிட்டுள்ளார்.
நேற்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை கூறியிருந்தார், இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"கிழக்கு மாகாணத்தில் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதிக நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இதய நோய் சத்திர சிகிச்சை இயந்திரம் ஒன்று அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது.
இதய நோயாளிகள்
ஆனால் துரதிஷ்டவசமாக அன்றிருந்த சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவினால் (Keheliya Rambukwella) அந்த இயந்திரம் வேறு ஒரு மாவட்டத்திற்கு இடம்மாற்றப்பட்டுள்ளது.
இதனால், கிழக்கு மாகாணத்தில் இதய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
இலவசமாக சிகிச்சை
இந்நிலையில் இது குறித்து அறிந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சத்திய சாயி பாபா வைத்தியசாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கி வருகிறது.
அதிலும் குறிப்பாக எந்தவிதமான கட்டணங்களும் இன்றி இலவசமாக சிகிச்சை வழங்கி வருவது பாராட்டத்தக்கது, இந்த இடத்திலே அந்த சத்திய சாயி பாபா வைத்தியசாலை நிர்வாகிகள், வைத்தியர்கள், ஊழியர்களுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்."என்றார் .
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |