பாப்பாண்டவரை சந்திக்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
பாப்பாண்டவர் பிரான்ஸிஸை, கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நாளைய தினம் சந்திக்க உள்ளார்.
வத்திக்கான் நேரப்படி நாளை பத்து மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
வெளிநபர்கள் எவரினதும் பங்குபற்றல் இன்றி பாப்பாண்டவருக்கும் கர்தினாலுக்கும் மட்டும் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் விசாரணைகளின் நிலைமை உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட உள்ளது.
பாப்பாண்டவரின் அழைப்பிற்கு அமைய வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ள கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, இன்றைய தினம் சென் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெறும் விசேட ஆராதணை ஒன்றிலும் பங்கேற்க உள்ளார்.
பாப்பாண்டவரினால் இந்த ஆராதணை நடாத்தப்பட உள்ளதாகவும் இதில் ஐரோப்பிய வாழ் இலங்கையர் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் பங்குபற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, திங்கட்கிழமை பாப்பாண்டவரை சந்தித்த பின்னர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அநேகமாக ஜெனீவா விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்