அதிகாரம் உங்களை பாதுகாக்காது : அரசியல்வாதிகளுக்கு கர்தினால் கடும் எச்சரிக்கை
அதிகாரம் ஒருபோதும் உங்களை பாதுகாக்கும் என நினைக்கவேண்டாம் என கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலேயே கர்தினால் அரசியல்வாதிகளுக்கு மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அடிப்படை உரிமை மனு
காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) மற்றும் பங்குதாரர்களால் 09 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கர்தினால்,
நாட்டின் நீதித்துறை தொடர்பில் மிகவும் பெருமை
நாங்கள் நாட்டின் நீதித்துறை தொடர்பில் மிகவும் பெருமையடைகின்றோம். உண்மைக்காக நிற்கும் நீதிபதிகள் தொடர்பிலும் பெருமைப்படலாம்.
அத்துடன் அரசியல்வாதிகளை அதிகாரம் பாதுகாக்கும் என நினைக்கவேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |