ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை வரும் ஜூலை 31ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல இன்று விடுப்பில் இருந்தமையால், வழக்கு இன்று நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது, வழக்கை ஜூலை 31ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய கலந்தாய்விற்காக அழைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வழக்குத் தாக்கல்
வழக்கு இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதிவாதியான ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு, அதன் மூலம் இன நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறியே சட்டமா அதிபரினால் இவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 22 மணி நேரம் முன்