உயர் தர பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற மாணவர்களுக்கான பணப்பரிசில்கள் வழங்கி வைப்பு
உயர் தர பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற 360 மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்த நிகழ்வு இன்று (25) சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தில் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில் 2023/ 2024 ஆண்டு க.பொ.த உயர் தரத்தில் பரீட்சையில் சிறப்பு சித்தியை பெற்ற மாணவர்களுக்கு பணப் பரிசில்களை சபாநாயகர் வைத்தியகலாநிதி ஜகத் விக்கிரமரத்ன (Jagath Wickramarathne) வழங்கி வைத்தார்.
பணப் பரிசிக்கள்
ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர் எஸ்.சி. ரோஷன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோரின் பங்குபற்றி இருந்தனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின்கீழ் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பரவலாக்கும் செயற்றிட்டத்தின் கீழ் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு 36 மில்லியன் ரூபா நிதியிலான பணப் பரிசிக்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |





