இலங்கையிலுள்ள இளைஞர் யுவதிகளின் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் : வெளியான காரணம்
நாட்டில் பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் அதிக எடை மற்றும் உடல் பருமன் விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மகிபால (Palita Mahipala) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை மருத்துவ முகாம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நாட்டில் சுமார் 48 சதவீத பெண்கள் அதிக எடையுடன் இருப்பதாகவும், குறைந்தது 33.3 சதவீத ஆண்கள் தங்கள் ஆரோக்கியமான எடையை விட அதிக எடையுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான உணவு
இந்தநிலையில், உடற்பயிற்சியின்மை மற்றும் ஆரோக்கியமான உணவுகளில் கவனம் செலுத்தாமையே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன் சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு அதிகமாக உட்கொள்ளும் போது உடற்பயிற்சி செய்யும் அளவில் கவனம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்ளல் குறைந்துள்ளதுடன் சமுதாயத்தில் பெரும்பாலான மக்கள் தங்கள் நோய்களைப் பற்றி அறிந்திருக்கமாட்டார்களெனவும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் நாட்டின் முதியவர்களில் 42% பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாலித மகிபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |