மத்திய வங்கியினால் குறைக்கப்பட்ட வட்டி வீதம்!
சிறிலங்கா மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை 19 சதவீதம் மற்றும் 10 சதவீதமாகக் குறைக்கும் முடிவை நாணயக் கொள்கை வாரியம் அறிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் பணவீக்கத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
உலகப் பொருளாதாரம்
உள்நாட்டு மற்றும் உலகப் பொருளாதாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மேலும் அதிகரிக்கவும், பணவீக்கத்தினை 5% ஆகக் குறைப்பதனையும் இலக்காகக் கொண்டு செயற்படுவதனை நோக்காக கொண்டு மத்திய வங்கி செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்தக் கொள்கை வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலம், கடந்த ஜூன் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட பணவியல் கொள்கை நடவடிக்கைகளுடன், பணவீக்கத்தை நிலைநிறுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை வட்டி வீதங்களை வழமை போல இயல்பாக்குவதனை இந்த வட்டி வீதங்களைக் குறைப்பதன் மூலம் துரிதப்படுத்தலாம் எனவும் மத்தியவங்கி எதிர்வு கூறியுள்ளது.
