இலங்கை வரும் பிரமுகர்களுடன் செல்பி எடுக்க தடை - மக்ரோன் வருகையின் பின் எடுக்கப்பட்ட முடிவு
இலங்கைக்கு வருகை தரும் அதிபர்கள் அல்லது பிரமுகர்களுடன் தனிப்பட்ட ரீதியில் புகைப்படங்கள் கோரவோ அல்லது எடுக்கவோ வேண்டாம் என அதிபர் செயலகம் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அவ்வாறான வருகைகள் பற்றிய எந்தவொரு தகவலும் அந்தந்த உத்தியோகபூர்வ ஊடக அறிக்கைகளுடன் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஜூலை 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, அதிபர் செயலக பணியாளர்கள், அவருடன் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
பிரான்ஸ் அதிபர் விஜயம்

பணியாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் சமூக ஊடகங்களில் எதிர்மறையான கருத்துக்கள் எழுந்துள்ளதாக அதிபர் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், இந்த விடயத்தை மேற்கோள்காட்டி இந்த புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.