சீமெந்தின் விலையும் அதிகரிப்பு
ஜனவரி 1 முதல் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வற் வரி அதிகரிப்பால், உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் சீமெந்தின் விலை150 ரூபாயால் அதிகரித்துள்ளதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விலை உயர்வின் மூலம் சில சீமெந்து நிறுவனங்களில் 2,300 ரூபாவாக இருந்த 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலை, 2,450 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பு
இதேவேளை, சீமெந்தின் மீது மூன்று சதவீத வற் வரி மட்டுமே விதிக்கப்பட வேண்டும் எனவும், ஆனால் சீமெந்து நிறுவனங்கள் மூன்று சதவீதத்திற்கும் அதிகமாக விதித்துள்ளன என தேசிய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் (NCWU) செயலாளர் சுபுன் அபேசேகர தெரிவித்தார்.
இதன்படி, வற் வரி அதிகரிப்பிற்கேற்ப சீமெந்து சார் உற்பத்திப் பொருட்களின் விலை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன் கட்டட நிர்மாணப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |