மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு இடைநிறுத்தம்
தெளிவான மற்றும் நியாயமான தீர்வு கிடைக்கும் வரை மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறு அரசாங்க நிதி தொடர்பான குழு இலங்கை மத்திய வங்கிக்கு பரிந்துரைத்துள்ளது.
மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு தொடர்பான குழுவின் அறிக்கையை அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா இன்று (20) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த ஹர்ஷ டி சில்வா, சம்பள அதிகரிப்பை பரிசீலிக்க மத்திய வங்கி ஆளுநரின் அனுமதியுடன் சுயாதீன கைத்தொழில் குழுவொன்றை உடனடியாக நியமிக்குமாறு நிதியமைச்சரும் பரிந்துரைப்பதாக தெரிவத்துள்ளார்.
சம்பளத்தில் மாற்றம்
அத்தோடு, இந்த அறிக்கையை 4 வாரங்களுக்குள் அரசாங்க நிதிக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு பரிந்துரைத்த ஹர்ஷ டி சில்வா, கிடைத்த உண்மைகளின் அடிப்படையில் அநாமதேயமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வு கிடைக்கும் வரை சம்பள அதிகரிப்பை ஒத்திவைக்குமாறும் பரிந்துரைத்துள்ளார்.
அதன்படி, இலங்கை மத்திய வங்கியுடன் தொடர்புடைய ஊழியர்களின் நிபுணத்துவத்தை முதன்மைப்படுத்தி அனைத்து ஊழியர் தரத்தினதும் சம்பளத்தில் நியாயமான மாற்றங்களை இந்தக் குழு மேற்கொள்ளும் என அரசாங்க நிதி தொடர்பான குழு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |