முதல் உலகப் போரின் படைவீரர்கள் எழுதிய கடிதங்கள் கண்டுபிடிப்பு
அவுஸ்திரேலியாவில் நூறாண்டுகள் பழைமையான கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேற்கு அவுஸ்திரேலியாவின் எஸ்பரன்ஸ் பகுதியில் உள்ள வார்டன் கடற்கரையில் இந்த கடிதங்கள் கண்டுபடிக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் புதைந்திருந்த ஒரு போத்தலில் இருந்து இந்த கடிதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நூறாண்டுகள்
இந்த போத்தலை, டெப் ப்ரவுன் என்ற பெண் தனது கணவர் பீட்டர் மற்றும் மகள் பெலிசிட்டியுடன் கடற்கரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது கண்டெடுத்துள்ளார்.

இந்தநிலையில் மேற்படி கடிதங்கள், 1916 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி மால்கம் நெவில் மற்றும் வில்லியம் ஹார்லி என்ற இரு அவுஸ்திரேலிய படைவீரர்களால் எழுதப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.
உலகப் போர்
குறித்த படை வீரர்கள் இருவரும் முதல் உலகப் போரில் பிரான்ஸ் போர்க்களத்துக்குச் செல்லும் கப்பலில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, இந்த போத்தலுக்குள் இருந்த கடிதங்கள், பென்சிலால் எழுதப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        