பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் குறித்து சமல் ராஜபக்சவின் அறிவிப்பு
சிறிலங்கா அதிபர் தேர்தலின் அதிபர் வேட்பாளராக ஒருவரை தெரிவு செய்தற்கு முன், அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் எவ்வாறான வேலைத் திட்டங்களை செய்திருக்கின்றார் என்பது குறித்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச (Chamal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சமல் ராஜபக்ச ”எமது கட்சியிலிருந்து தகுதியான ஒருவரின் பெயர் குறிப்பிடப்படும். அது குறித்து நாம் இன்னும் தீர்மானிக்கவில்லை.
முன்னேற்றமடைந்துவரும் நாடு
மக்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும் வகையில், தாம் முடிவொன்றை எடுப்போம்.
நாடு தற்போது ஓரளவுக்கு முன்னேற்றமடைந்து வருகின்ற நிலையில் அதிபர் என்ற பதவிக்கு முழு அனுபவம் கொண்ட ஒருவரே தேவை.
அதிபர் என்ற பதவியை தாமே வைத்திருப்பதை விட, தகுதியானவர்களுக்கு இடம்கொடுக்க வேண்டும்“ என சமல் ராஜபக்ச தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |