ஜனாதிபதி அநுரவை நேருக்கு நேர் நின்று விமர்சித்த எம்பி சாமர சம்பத்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சிறப்பு அறிக்கையொன்றை வெளியிடுவதற்காக நாடாளுமன்றுக்கு வந்தபோது திரைக்குப் பின்னால் நடந்த ஒரு உரையாடல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்போது, இன்னும் சில மாதங்களில் அரசாங்கங்கத்தை கவிழ்ப்போம் என்று சில அரசியல் தலைவர்கள் கூறியதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, “அரசாங்கத்தை இப்போது கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை, ஜனாதிபதியே, நாங்கள் அதைச் சிறிது ஒத்திவைத்துள்ளோம், 2027 இல் அதைக் கவிழ்ப்போம்." என தெரிவித்துள்ளார்.
அரசாங்க கவிழ்ப்பு
அதற்கு ஜனாதிபதி புன்னகையுடன் பதிலளித்தபோது, சாமார மீண்டும், “ஆனால் ஜனாதிபதி உங்கள் அமைச்சர்களின் வாயை மூடியிருக்காவிட்டால், 2027 இற்கு முன்பே அரசாங்கம் கவிழ்க்கப்பட்டிருக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும், விமான நிறுவனத்தின் பல்வேறு நடவடிக்கைகளைப் பாதுகாக்க சில தரப்பினர் பாடுபடுவதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்தும் அவர் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்ததாகக் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 6 மணி நேரம் முன்
