சாமர சம்பத் உள்ளிட்ட இருவர் மீண்டும் விளக்கமறியலில்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முறையான அனுமதியின்றி பொஸ்பேட் ஏற்றுமதி செய்ய சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு உதவியதன் மூலம் இலஞ்சமாகப் பணம் பெற்றுக் கொண்டமை மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் குறித்த இருவருக்கும் எதிராக இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன.
பிணை
இன்றைய தினம் இந்த வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது தனிப்பட்ட செயலாளரும் ஒரு வழக்கு தொடர்பில் சமர்ப்பித்த பிணை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் கிரிஷ் குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் பிணை கோரிக்கைகளை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |