வரி விதிப்பு மாத்திரமே ரணிலின் பிரதான பொருளாதார கொள்கை : சம்பிக்க குற்றச்சாட்டு

Champika Ranawaka Ranil Wickremesinghe Budget 2024 - sri lanka
By Beulah Nov 16, 2023 02:19 AM GMT
Report

வரி விதிப்பு மாத்திரமே அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பொருளாதார கொள்கையாக உள்ளது.ஆகவே இந்த யோசனையை செயற்படுத்தினால் அடுத்த ஆண்டில் முதல் ஆறு மாத காலத்துக்குள் மக்கள் போராட்டம் பாரியதொரு புரட்சியாக வெடிக்கும் என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (15) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

வனவிலங்கு அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு: வெளியான காரணம்

வனவிலங்கு அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு: வெளியான காரணம்

சர்வதேச நாணய நிதியம்

“அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் யதார்த்தபூர்வமற்றது.

வரி விதிப்பு மாத்திரமே ரணிலின் பிரதான பொருளாதார கொள்கை : சம்பிக்க குற்றச்சாட்டு | Champika Ranawake Condemnation 2024 Budget Ranil

இந்த வரவு செலவுத் திட்டத்தின் பல முன்மொழிவுகள் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டும் முன்வைக்கப்பட்டன.

ஆனால் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமான இலக்கு 3130 பில்லியன் ரூபாவாக குறிப்பிடப்பட்டது.

ஆனால் தற்போது 2500 பில்லியன் ரூபா வருமானம் திரட்டப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட இலக்கை அடையவில்லை. இவ்வாறான நிலையில் 2024 ஆம் ஆண்டு 3820 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசாங்கம் செயற்படுகிறது.

2022 ஆம் ஆண்டு 8.5 சதவீதமாக காணப்பட்ட மொத்த தேசிய உற்பத்தியை 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 15.5 சதவீதமாக அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இது முற்றிலும் சாத்தியமற்றது.இந்த யோசனைகளை செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெறும்.

பெறுமதி சேர் வரி 

2023 ஆம் ஆண்டு பெறுமதி சேர் வரி ஊடாக 908 பில்லியன் ரூபா வரி வருமானம் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நிறைவடைந்த 09 மாதகாலப்பகுதிக்குள் 680 பில்லியன் ரூபா வருமானமே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வரி விதிப்பு மாத்திரமே ரணிலின் பிரதான பொருளாதார கொள்கை : சம்பிக்க குற்றச்சாட்டு | Champika Ranawake Condemnation 2024 Budget Ranil

இந்த வரி வருமானத்தை பெறுவதற்காக ஒட்டுமொத்த மக்களின் உழைப்பு மற்றும் சேமிப்பு சூறையாடப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு எரிபொருளுக்கும் 10 சதவீத பெறுமதி சேர் வரி அறவிடப்படும்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இந்த ஆண்டு 88 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது.

ஒரு லீற்றர் டீசலில் இருந்து 80 வரியும்,ஒரு லீற்றர் பெற்றோலில் இருந்து 120 ரூபா வரியும் அரசுக்கு செலுத்தப்படுகிறது.

ஆகவே இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நட்டமடைகிறது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மின்சார சபை

மின்சார சபை கடந்த எட்டுமாத காலப்பகுதியில் 20 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளது என்று குறிப்பிடப்படுகிறது.

வரி விதிப்பு மாத்திரமே ரணிலின் பிரதான பொருளாதார கொள்கை : சம்பிக்க குற்றச்சாட்டு | Champika Ranawake Condemnation 2024 Budget Ranil

ஆனால் கடந்த செப்டெம்பர், ஒக்டோபர் ஆகிய மாதங்களில் மாத்திரம் மின்சார சபை 20 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது.

எரிபொருள் மற்றும் மின்சார கட்டண அதிகரிப்பால் தொழில்துறையிலுள்ள மக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மக்கள் தமது சொத்துக்களையும், தங்க ஆபரணங்களையும் விற்று வாழ்கிறார்கள்.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள், அரச வருமானம் எதிர்பார்ப்பு மற்றும் வரி விதிப்பு ஆகிய தீர்மானங்களினால் அடுத்த ஆண்டு மக்கள் போராட்டம் மீண்டும் தலைத்தூக்கும்.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது அது அவரது இறுதி வரவு செலவுத் திட்டம் என்பதை அவரிடம் குறிப்பிட்டேன், அதே போல் தோற்றம் பெறவுள்ள மக்கள் போராட்டத்தை அரசாங்கத்தால் தடுக்க முடியாது என பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த சரத் வீரசேகரவிடம் குறிப்பிட்டேன்.

எனது கருத்து உண்மையாகியுள்ளது. அரச வருமான இலக்கை தொகையில் மாத்திரம் குறிப்பிட்ட அதிபர் வருமானத்தை திரட்டிக்கொள்ளும் யோசனைகளை குறிப்பிடவில்லை.வரி விதிப்பு மாத்திரமே அவரது பிரதான பொருளாதார கொள்கையாக உள்ளது.

ஆகவே இந்த யோசனையை செயற்படுத்தினால் அடுத்த ஆண்டில் முதல் ஆறு மாத காலத்துக்குள் மக்கள் போராட்டம் பாரியதொரு புரட்சியாக வெடிக்கும்.

ஆகவே மக்கள் போராட்டத்தை தடுக்க ஆட்சியாளர்களும், ஆளும் தரப்பும் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும்.” என்றார்.

இந்திய படையை வெளியேற்றுவோம் : மாலைதீவு புதிய அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு

இந்திய படையை வெளியேற்றுவோம் : மாலைதீவு புதிய அதிபரின் அறிவிப்பால் பரபரப்பு

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புளியங்குளம், Scarborough, Canada

15 Mar, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, நீர்கொழும்பு

16 Apr, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Wimbledon, United Kingdom, Barnet, United Kingdom

09 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், மல்லாவி, விசுவமடு, பிரான்ஸ், France

15 Apr, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

11 Apr, 2025
மரண அறிவித்தல்