கொரோனா மரணங்கள் அதிகரிக்க வாய்ப்பு!
கொரோனா உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் (Dr. Hemantha Herath)எச்சரித்துள்ளார்.
நேற்று (ஒக். 25) பதிவான கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை முன்னைய காலங்களுடன் ஒப்படும்போது "மிகக் குறைவானது" என்றும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனவே, மீண்டும் ஒருமுறை கொரோனா தொற்று குறித்து அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று கிடைத்த விபரங்களின் அடிப்படையில் கொவிட் மரணங்கள் அதிகரித்துள்ளதை காண முடிகிறது. இது குறித்து எதனையும் 100 வீதம் உறுதியாக கூற முடியாது.
மரணங்கள் அதிகரித்துள்ளதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மரணங்கள் அதிகரித்திருப்பது ஒரு சமிக்ஞையாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது.
இதனால், இந்த நிலைமையை சாதாரணமாக கருதாது, மிகவும் கவனமாக செயற்படுமாறும் அவர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். இலங்கையில் நேற்று மேலும் 29 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.