இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள கூகுள்
இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் (Google) இலங்கையின் தேசிய கொடியினை தனது அட்டை படத்தில் வெளியிட்டு தமது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) 8514 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வுகளை வழங்கியுள்ளார்.
ஜெனரல் சவேந்திர சில்வா 2019 ஆண்டு ஓகஸ்ட் 18 ஆம் திகதி இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் குறுகிய காலத்திற்குள் பெருமளவிலான அதிகாரிகள் மற்றும் ஏனைய இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் விசேட பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்காக இலங்கை காவல்துறை, விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரின் உதவியுடனும் 3,000 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு பிரிவினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.