தவணை பரீட்சை முறையில் மாற்றம்! மாணவர்களுக்கு இரண்டு இடைவேளை
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலைகளில் தவணை பரீட்சை முறையை ஒழித்து, அதற்கு பதிலாக மட்டுப்படுத்தப்பட்ட முறையின் கீழ் மாணவர்களின் செயல்திறனை மதிப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலை நேரத்தை காலை 7:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிக்கவும், அந்தக் காலகட்டத்தில் மாணவர்களுக்கு இரண்டு இடைவேளைகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தவணை பரீட்சை முறையை மாற்றுவது குறித்து கல்வித் துறையில் நிபுணர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டதாக தேசிய கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்படும் இடைவேளை
பாடசாலை நேரங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இடைவேளை நேரம் போதுமானதாக இல்லை என்றும், அதன்படி, காலை 10:10 மணி முதல் காலை 10:30 மணி வரையிலும், மதியம் 12:10 மணி முதல் மதியம் 12:20 மணி வரையிலும் இரண்டு இடைவேளைகள் வழங்கப்படும் என்றும் அதன் துணை இயக்குநர் ஜெனரல் வைத்தியர் அசோக டி சில்வா நேற்று (ஜூலை 23) தெரிவித்துள்ளார்.
ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேரத்தை 50 நிமிடங்களாக அதிகரிப்பதை மாணவர்கள் பொறுத்துக்கொள்வது கடினமாக இருக்கலாம் என்பதால், இதுபோன்ற இரண்டு இடைவேளைகள் வழங்கப்படும் என்றும் துணை இயக்குநர் கூறியுள்ளார்.
மேலும், வகுப்பு நேர அட்டவணைகள் காலை 7:40-8:30, 8:30-9:20, 9:20-10:10, 10:30-11:20, 11:20-12:10 PM, 12:20-1:10, 1:10-2:00 PM என திருத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தள்ளார்.
“புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தொடக்கக் கல்வியில் பின்வரும் பாடங்கள் அடங்கும்,
அடிப்படை அறிவியல், தாய்மொழி, ஆங்கிலம், இரண்டாம் மொழி, கணிதம், மதம், மதிப்பீகல்வி, சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகள், ஒருங்கிணைந்த அழகியல் பாடங்கள், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி என்பனவாகும்.
6-9 மற்றும் 10-11 ஆம் வகுப்புகள்
மேலும், 6-9 மற்றும் 10-11 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் படிக்க 14 பாடங்கள் உள்ளன என்றும், 6-9 ஆம் வகுப்புகளுக்கான பாரம்பரிய பாடப்புத்தகத்திற்கு பதிலாக, ஒவ்வொரு பாடத்திற்கும் பாட உள்ளடக்கம் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் வழங்கப்படும்.
தொழில்முனைவு மற்றும் நிதி கல்வியறிவு என்ற பாடம் 6 ஆம் வகுப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்படும் என்றும், 9 ஆம் வகுப்பில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தேர்வு அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஒவ்வொரு குழந்தையும் விளையாட்டுக் கழகங்களில் ஈடுபட வேண்டும் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.” என அசோக டி சில்வா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
