வருட இறுதிக்குள் கட்டுநாயக்காவில் இடம்பெறவுள்ள மாற்றம்
இந்த வருட இறுதிக்குள் மேலும் ஐந்து புதிய விமான நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்தார்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சகம் சர்வதேச அளவில் நடத்திய கலந்துரையாடலின் விளைவாக புதிய விமான நிறுவனங்கள் இலங்கையுடன் விமான சேவைகளை தொடங்கவுள்ளன.
அதன்படி, சுவீடனின் Edelweiss நவம்பர் 1 முதல் வாரத்திற்கு ஒரு விமானத்தையும், ரஷ்யாவின் Aeroflot வாரத்திற்கு இரண்டு முறையும் பறப்பை மேற்கொள்ளும்.
டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து ரஷ்யாவின் Air Azure வாரத்திற்கு இரண்டு முறையும், இத்தாலியின் Nyos Air வாரத்திற்கு இரண்டு முறையும் பறப்பை மேற்கொள்ளும்.
கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு இவ்வாறான சர்வதேச விமான நடவடிக்கைகளை பேணுவதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.