சம்பூர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்
Sri Lankan Tamils
Tamils
Trincomalee
By Independent Writer
திருகோணமலை - சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் ஒழுங்கமைப்பில் இன்று (08) காலை சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.
சிரமதான நிகழ்வில் முன்னாள் போராளிகள், போராளிகளின் குடும்பத்தினர்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிரமதான பணிகள்
மாவீரர் நாள் நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு சம்பூர் -ஆலங்குளம் துயிலுமில்லத்தில் தொடர்ந்தும் சிரமதானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் சிரமதானப் பணிகளில் கலந்து கொள்ளக் கூடியவர்கள் கலந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்