செம்மணிப் புதைகுழி தொடர்பான ராஜ் சோமதேவவின் அறிக்கை : நீதி அமைச்சரின் அறிவிப்பு

Jaffna Parliament of Sri Lanka Harshana Nanayakkara chemmani mass graves jaffna
By Sathangani Nov 22, 2026 04:23 AM GMT
Report

யாழ்ப்பாணம் - செம்மணிப் புதைகுழி தொடர்பாக பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையானது, தொல்லியல் சூழல் தொடர்பான தடயவியல் தொல்லியல் அறிக்கையே தவிர, சட்ட வைத்திய அறிக்கை அல்ல என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அத்துடன் செம்மணி புதைகுழி தொடர்பாக முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணிகளும் விசாரணைகளும் முழுமையான நீதிமன்ற மேற்பார்வையின் கீழ், விஞ்ஞான ரீதியான முறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நேற்றைய (21) நாடாளுமன்ற அமர்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

யாழ். பல்கலை மோதல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய நடவடிக்கை

யாழ். பல்கலை மோதல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்ய நடவடிக்கை

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், செம்மணி புதைகுழியில் பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின் மூலம் இதுவரை சுமார் 574 நபர்களுக்குரிய எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணிப் புதைகுழி தொடர்பான ராஜ் சோமதேவவின் அறிக்கை : நீதி அமைச்சரின் அறிவிப்பு | Chemmani Mass Grave Investigation Min Of Justice

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த அகழ்வுப் பணிகள், யாழ்ப்பாணம் நீதவான், சம்பந்தப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் குற்றம் இடம்பெற்ற இடத்தைப் பரிசோதிக்கும் அதிகாரிகள் ஆகியோரின் முன்னிலையில் தொடர்ச்சியான மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும், 2025 ஏப்ரல் 29ஆம் திகதிய நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகமும் (OMP) பார்வையாளராக இச்செயற்பாட்டில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றது.

பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையானது, எலும்புக்கூட்டு எச்சங்கள் புதைக்கப்பட்டிருந்த தொல்லியல் சூழல் தொடர்பான தடயவியல் தொல்லியல் அறிக்கையே (Forensic Archaeological Report) தவிர, சட்ட வைத்திய அறிக்கை அல்ல.

அநுர அரசிற்கு மகிந்த தரப்பு விடுத்துள்ள சவால்

அநுர அரசிற்கு மகிந்த தரப்பு விடுத்துள்ள சவால்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுதல்

மரணத்திற்கான காரணம் மற்றும் மரணம் நிகழ்ந்த விதம் தொடர்பான சட்ட வைத்திய அறிக்கையைத் தயாரிக்கும் நடவடிக்கைகள், நீதவானின் உத்தரவின் பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவன் மற்றும் அவரது குழுவினரால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

செம்மணிப் புதைகுழி தொடர்பான ராஜ் சோமதேவவின் அறிக்கை : நீதி அமைச்சரின் அறிவிப்பு | Chemmani Mass Grave Investigation Min Of Justice

இலங்கையில் மேம்பட்ட DNA பகுப்பாய்வு வசதிகள் தற்போது இல்லாத காரணத்தினால், நீதிமன்றம் உத்தரவிடும் பொருத்தமான சந்தர்ப்பத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்களை அடையாளம் காண்பதற்கும் DNA பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் மாதிரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கும், சர்வதேச தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் முழுமையாகத் தயாராக உள்ளது.

விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையில் உண்மையைக் கண்டறிவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதுமே அரசாங்கத்தின் ஒரே நோக்கமாகும்.

இனம், மதம் அல்லது சாதி ஆகிய வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாது சட்டத்திற்கு அமைவாக இந்த விசாரணைகள் நிறைவு செய்யப்படும் என்றும், இந்த உணர்வுபூர்வமான விடயத்தை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்” என தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் மழை பெய்யும் சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு, கிழக்கில் மழை பெய்யும் சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026