செம்மணியில் இன்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித என்புக்கூட்டு தொகுதிகள் : சான்று பொருட்களும் மீட்பு
செம்மணி மனித புதைகுழியில் புதிதாக பதினைந்து மனித என்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன் பதினொரு மனித என்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 49ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றபோதே குறித்த மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
539 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்
யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் காவல்துறையினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.

இதுவரை மொத்தமாக 539 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு 524 மனித என்புக் கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன . 516வது இலக்கமிடப்பட்ட மனித என்பு கூட்டு தொகுதியின் இடுப்பு பகுதியில் மீட்கப்பட்ட தாயத்து போன்ற ஒன்றும், மணல் குவியலில் இருந்து ஒரு ரூபாய் நாணயக்குற்றி ஒன்றும் பிற சான்றுப் பொருட்களாக மீட்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |