சதுரங்க போட்டியில் பங்கேற்க அரிய வாய்ப்பு
இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் National championship 2022 போட்டிகளின் முதலாம் கட்டத் தெரிவுப்போட்டியான Novice Divison போட்டிகள் எதிர்வரும் 15,16 மட்டக்களப்பில் உள்ள புனித மிக்கேல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிகள் வயதுப் பிரிவுகள் அற்ற திறந்த போட்டியாகும் என்பதுடன், ஆண் - பெண் பிரிவுகள் தனியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபற்ற முடியும்.
இப்போட்டிகளில் தெரிவுசெய்யப்படும் வீரர்கள் அடுத்த கட்டப்போட்டிகளான Majors பிரிவுப்போட்டிகளில் பங்குபற்றலாம். Majors Division போட்டிகளானது International Rated தரத்திலான போட்டிகளாகும்.
போட்டியில் பங்கேற்க விருப்பும் மட்டக்களப்பு, திருகோணமலை வீரர்கள் 0758815533 (சௌத்ரி) எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.