முதலமைச்சர் ஸ்டாலினின் வன்ம அரசியல்: விஜய் பகிரங்க குற்றச்சாட்டு!
அமைதியாக இருந்த சந்தர்ப்பத்தில் தம் மீது வன்ம அரசியல் பரப்பப்பட்டதாக தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் தெரிவித்தார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு அவசர, அவசரமாக தனிநபர் ஆணையம், அந்த தனிநபர் ஆணையத்தையும் அவமதிக்கும் வகையில், அரசு உயரதிகாரிகள், காவல்துறை உயரதிகாரிகள் எல்லோரும் நம்மை பற்றி அவதூறுகளை பரப்பி, செய்தியாளர்கள் சந்திப்பை அவசர அவசரமாக நடத்தியதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் தமிழக வெற்றிக்கழக விசேட பொதுக்குழு கூட்டம் இன்று (05.11.2025)நடைபெற்றது.
பொதுக்குழு கூட்டம்
அண்மையில் கரூரில் இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தையடுத்து இன்று (05.11.2025) முதன்முறையாக கட்சித் தலைவர் விஜய் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி அதில் கலந்துக்கொண்டுள்ளார்.

இதில் கலந்துக்கொண்டு மேலும் கருத்து தெரிவித்த கட்சித் தலைவர் விஜய், முதலமைச்சரின் பேச்சில் மட்டும் தான் மனிதாபிமானம் உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க மற்றும் த.வெ.க இடையில் தான் போட்டி எனவும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், குறித்த பொதுக்குழு கூட்டத்தில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |