சபைக்கு வந்தே அறிவிப்போம்.! மத்திய வங்கி ஆளுநர் அதிரடி
பொருளாதாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில்களைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால், அவரது பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்கு வந்து பதில்களை வழங்க முடியும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழுவில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மத்திய வங்கியின் பிரதிநிதித்துவம்
இந்த நிகழ்வில் பேசிய மேற்படி குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பனர் ஹர்ஷ டி சில்வா, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பணவியல் கொள்கை, பணவீக்கம் அல்லது மாற்று விகிதங்கள் குறித்து கேள்விகளைக் கேட்கும்போது, அவருக்கு பதில்கள் கிடைப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்குக் காரணம் நாடாளுமன்றத்தில் மத்திய வங்கியின் பிரதிநிதித்துவம் இல்லாததே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமர்பிக்கப்படவுள்ள அறிக்கை
இதன்படி, அவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, மத்திய வங்கியின் ஆளுநர், அழைக்கப்பட்டால் நாடாளுமன்றத்திற்கு வந்து பதில்களை வழங்கத் தயாராக இருப்பதாகக் அறிவித்துள்ளார்.

மத்திய வங்கி தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய நேரத்தில் பதில்களை வழங்குவேன் என்று அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்கும் சில கேள்விகள் மத்திய வங்கிக்கு மட்டும் பொருத்தமானவை அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த கேள்விகள் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களுக்குப் பொருத்தமானவை என்றும், அந்த அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்ட பதில்கள் சேகரிக்கப்பட்டு, ஒரு அறிக்கை தொகுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |