யாழ் உரும்பிராயில் நடைபெற்ற கண்ணிவெடித் தாக்குதல்: முற்றுகைப் பீதியில் இந்தியப் படைகள்!
தமிழீழ வரலாற்றில் ஓர் கசப்பான அங்கமாக, இந்திய அமைதிப் படையால் (Indian Peace Keeping Force-IPKF) ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதை நாம் சுட்டிக்காட்ட முடியும்.
இந்த வரலாற்று பதிவு இந்திய மற்றும் இலங்கை ஒப்பந்தத்தின் நீட்சியாக ஆரம்பித்தது.
அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன ஆகியோரால் 1987 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கையொப்பமிடப்பட்ட குறித்த ஒப்பந்தத்தின்படி, இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இந்தியா அனுப்பிய இராணுவமே இந்திய அமைதி காக்கும் படை (IPKF- Indian Peace Keeping Force).
ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப் படை 10,000 இராணுவத்துடன் இலங்கைக்கு சென்றது.
இந்திய அமைதிப்படையை ஈழத்தமிழ்ரகள் வரவேற்றிருந்தாலும் கூட இலங்கை சென்ற இரண்டு மாதங்களிலேயே தமிழர்களுக்கு எதிரான தனது தாக்குதலை ஆரம்பித்து சிங்கள இராணுவத்திற்கு இணையாக தமிழின அழிப்பை நிகழ்த்த ஆரம்பித்தது.
சமாதானத்திற்காகவும், அமைதிக்காகவும் அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படையால் பதிவான உயிர்ச்சேதங்கள் எண்ணிலடங்காதவை.
இவை தொடர்பாக முழுமையாகவும், ஆழமாகவும் ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அவலங்களின் அத்தியாயங்கள்..............
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |