குரல் பதிவால் எழுந்துள்ள பெரும் சர்ச்சை: செல்வம் எம்.பியின் மௌனத்தால் வலுக்கும் சந்தேகம்
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதாகவும் தனக்கு பாதுகாப்பு அவசியம் எனவும் கூறி காவல்துறையில் முறைப்பாடொன்றை வழங்கியிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் செல்வம் அடைக்கலநாதனுடையது எனத் தெரிவிக்கப்படும் குரல் பதிவொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தக் குரல் பதிவில் தொலைபேசியில் உரையாடும் செல்வம் அடைக்கலநாதனுடைய சாரதி என அடையாளப்படுத்தப்படுபவர் மிகவும் அச்சத்துடன் உரையாடுவதையும் கேட்க முடிகிறது.
இவ்வாறு சமூக வலைத்தளங்களில் தற்போது பகிரப்பட்டு வரும் இந்தக் குரல் பதிவு தொடர்பில் கேட்டறிய எமது ஊடகம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனை தொடர்புகொள்ள முயற்சி செய்த போதிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இவ்விடயம் தொடர்பில் அவரது சக கட்சி உறுப்பினர்களிடம் வினவிய போது மிகவும் பொறுப்பற்ற விதத்தில் “அது அவருடைய தனிப்பட்ட ஒரு பிரச்சினை” என நழுவுவதையும் எங்களால் உணர முடிந்தது.
ஆகவே, மக்களுக்கான ஒரு தலைவராக செல்வம் அடைக்கலநாதன் இவ்விடயம் தொடர்பில் இனியும் மௌனம் காக்காமல் விளக்கமளிக்க வேண்டும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |