தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் சிறுமியை கொடூரமாக தாக்கிய இளைஞன்
தன்னை திருமணம் செய்துக் கொள்ள மறுத்த பாடசாலை மாணவி ஒருவரை 26 வயதுடைய இளைஞன் ஒருவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தம்புள்ளை - பன்னம்பிடிய, மெனிக்தென பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமியின் பெற்றோர் உயிரிழந்துள்ள நிலையில், சிறுமி மற்றும் அவரது இளைய சகோதரன் தனது பாட்டியின் அரவணைப்பில் வாழந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த சிறுமியிடம் இளைஞன் ஒருவன் தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு கோரி வந்துள்ள நிலையில் அதனை சிறுமி நிராகரித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 30 ஆம் திகதி குறித்த சிறுமியின் வீட்டுக்கு வந்த இளைஞன் கூரிய ஆயுதத்தால் சிறுமியை கொடூரமாக தாக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
மேலும், 26 வயதுடைய சந்தேகநபர் பன்னம்பிட்டி மெனிக்தென பிரதேசத்தில் பதுங்கி இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இரண்டு பொலிஸ் குழுக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.