சோகத்தில் முடிந்த மாணவர்களின் சுற்றுலா! சடலமாக மீட்கப்பட்ட தரம் 10 மாணவன்
Sri Lanka Police
Sri Lanka
Death
By pavan
வென்னப்புவ, பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பன்னல, மாகந்துர பகுதியில் உள்ள தனியார் வகுப்பு மாணவர்கள் 80 பேர் அந்த பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த நிலையில், குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாணவர்கள் குழு ஒன்று நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, குறித்த மாணவர் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை

சந்தலங்காவ பிரதேசத்தில் வசிக்கும் 14 வயதுடைய 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி