சிறுமி இஷாலியின் மரணம் - ‘பொன்னையா’விடம் இன்று விசாரணை
police
death
investigation
child ishalini
By Sumithiran
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயது சிறுமியான ஹிஷாலினி தொடர்பில் இன்றும் வாக்கு மூலம் பதிவுசெய்யப்படவுள்ளது.
இதன்படி சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற பொன்னையா என்ற டயகம பிரதேசத்தைச் சேர்ந்த தரகரிடம் அது தொடர்பில் இன்று விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஹிஷாலினி விவகாரம் தொடர்பில் இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றன.
டயகமவுக்கு நேற்று சென்ற விசேட பொலிஸ் குழுவொன்று, ஹிஷாலினியின் பெற்றோர் மற்றும் சகோதரனிடம் சுமார் 10 மணிநேரம் விசாரணையை மேற்கொண்டது.
ஹிஷாலினி விவகாரம் தொடர்பில் இதுவரை 6 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 16 மணி நேரம் முன்