பயங்கரவாதிகள் யார் - புத்தகப் பையுடன் புதைக்கப்பட்ட பாலகன்...! உலகிற்கு அம்பலமான கோர முகங்கள்

United Human Rights Jaffna Tamil nadu India chemmani mass graves jaffna
By Thulsi Jul 01, 2025 05:05 AM GMT
Report

எமது ஈழ மண்ணின் உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியானது இவ்வுலகிற்கு பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தி விட்டது என தென்னிந்திய இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

குறித்த மனிதப் புதைகுழியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட எம் உறவுகளது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படுகின்ற சம்பவமானது பேரதிர்ச்சியையும் கடந்தகால சிங்கள அரசுகளின் கோர முகங்களையும் எடுத்துக் காட்டுவதாக வ.கௌதமன் குறிப்பிட்டுள்ளார்.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஆடைகளின்றி புதைக்கப்பட்ட மக்கள்...! அர்ப்பணிப்புடன் அகழ்வுப் பணியாளர்கள்

ஆடைகளின்றி புதைக்கப்பட்ட மக்கள்...! அர்ப்பணிப்புடன் அகழ்வுப் பணியாளர்கள்

தாய் ஒருவர் சேயை அணைத்தவாறு

அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பயங்கரவாதிகள் யார் - புத்தகப் பையுடன் புதைக்கப்பட்ட பாலகன்...! உலகிற்கு அம்பலமான கோர முகங்கள் | Childs Skeletal Remains With Schoolbag At Chemmani

நேற்று வரையான (30) அகழ்வுகளின்போது 33 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பல எலும்புக்கூடுகள் கொடூர கொலை இடம்பெற்றதை ஆதாரப்படுத்துகின்றது.

அதாவது தாய் ஒருவர் சேயை அணைத்தவாறு ஒரு எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் சிறுவன் ஒருவனது எலும்புக்கூடானது புத்தகப் பையுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆதாரங்களானது கடந்தகால அரசுகளின் கோர முகத்தை வெளிப்படுத்துகிறது. குறித்த மயானமானது எரியூட்டப்படும் மயானமாகவே காணப்படுகிறது.

AI ஊடாக உருமாற்றப்படும் செம்மணி மனித எலும்புகள் - கடும் எச்சரிக்கை: பாயவுள்ள சட்டம்

AI ஊடாக உருமாற்றப்படும் செம்மணி மனித எலும்புகள் - கடும் எச்சரிக்கை: பாயவுள்ள சட்டம்

புத்தகப் பையுடன் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன்

இறந்தவர்களது உடல்கள் பொதுமக்களால் அங்கு புதைக்கப்படுவதில்லை. அத்துடன் குறித்த பகுதியானது யுத்த காலத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே காணப்பட்டது.

ஆகையால் அந்தப் பகுதிக்குள் இராணுவத்தினரை மீறி எவரும் உள்ளே செல்ல முடியாது. ஆகையால் இந்த கொடூர கொலைகளை இலங்கை இராணுவமே மேற்கொண்டிருக்கும் என்ற கருத்தில் ஐயம் இல்லை.

பயங்கரவாதிகள் யார் - புத்தகப் பையுடன் புதைக்கப்பட்ட பாலகன்...! உலகிற்கு அம்பலமான கோர முகங்கள் | Childs Skeletal Remains With Schoolbag At Chemmani

எங்கள் மக்களின் விடியலுக்காகவும், எம் மண்ணின் விடுதலைக்காகவும் போராடிய விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றார்கள். எம் தமிழ் மக்களையும் பயங்கரவாதிகளாக தென்னிலங்கை தேசத்துக்கு எடுத்துக் காட்டினார்கள்.

உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை இப்போது உலகம் அறிகிறது. அந்த புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட தாயும் சேயும் என்ன பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள்? புத்தகப் பையுடன் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன் என்ன பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட்டான்? தாய் மண்ணுக்காக போராடியவர்கள் பயங்கரவாதிகளா? அல்லது மண்ணின் உரிமைக்காக போராடிய இனத்தையே வேரோடு அழிக்க வேண்டும் என்ற கோர முகத்துடன் செயற்பட்டவர்கள் பயங்கரவாதிகளா? என்ற கேள்விக்கு செம்மணி மனிதப் புதைகுழியானது பதில் தந்துள்ளது. இதுவரை 33 எலும்புக்கூடுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யுத்தம் நிறைவுற்று 16 ஆண்டுகள்

குறித்த பகுதியில் 600க்கு மேற்பட்டோரது எலும்புக்கூடுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட 33 எலும்புக்கூடுகளிலேயே இத்தனை கொடூரங்கள் வெளிப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள எலும்புக்கூடுகளில் இன்னமும் எத்தனையெத்தனை குரூரங்கள் இருக்குமோ என நினைக்கும்போது நெஞ்சம் பதைபதைத்து.

பயங்கரவாதிகள் யார் - புத்தகப் பையுடன் புதைக்கப்பட்ட பாலகன்...! உலகிற்கு அம்பலமான கோர முகங்கள் | Childs Skeletal Remains With Schoolbag At Chemmani

அடி வயிறே பற்றியெரிகிறது. யுத்தம் நிறைவுற்று 16 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டங்களில் ஈடுபட்ட பலர் தமது பிள்ளைகளுக்கு அல்லது தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே வயது மூப்பினாலும் பல்வேறு காரணங்களாலும் உயிரிழந்துள்ளார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது சொந்தங்களுக்கு என்ன நடந்தது என்று விடயத்தையாவது ஏனைய உறவுகள் தமது வாழ்க்கை காலத்தில் தெரிந்துகொள்ள வேண்டும். யுத்தம் நிறைவுற்று 16 ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஏன் இந்த விடயங்களை அம்பலப்படுத்தவில்லை? இதிலேயே தெரிகிறது அவர்களது இனவாத முகம்.

என்னதான் மூடி மூடி மறைத்தாலும் உண்மைகள் எப்போதும் உறங்காது என்பதற்கு செம்மணிப் புதைகுழி ஒரு மிகச் சிறந்த உதாரணம். கடந்த காலத்தில் மோசடிகளில் ஈடுபட்ட அமைச்சர்களையும் அதிகாரிகளையும் தற்போதை அநுர அரசு தண்டிக்கிறது.

பாதிக்கப்பட்ட எமது தொப்புள் கொடி உறவு

அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால் இந்த செம்மணி புதைகுழி விவகாரத்தில் அவர்களும் இனவாத கொள்கையில் செயற்படுகின்றார்களா? அல்லது அனைத்து இனங்களையும் சமமாக வழி நடத்துகின்றார்களா என்ற விடயம் இனிவரும் அவர்களது செயற்பாட்டில் உறுதியாக தெரியவரும்.

பயங்கரவாதிகள் யார் - புத்தகப் பையுடன் புதைக்கப்பட்ட பாலகன்...! உலகிற்கு அம்பலமான கோர முகங்கள் | Childs Skeletal Remains With Schoolbag At Chemmani

பாதிக்கப்பட்ட எமது தொப்புள் கொடி உறவுகளுக்கு நீதி கிடைக்கும் காலம் கனிந்து வருகிறது என எனக்கு தோன்றுகிறது. இதனை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி சர்வதேச சமூகங்களும், புலம்பெயர் உறவுகளும், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் ஓரணியில் நின்று இலங்கை அரசாங்கத்தின் மீது ஆக்கப்பூர்வமான அழுத்தங்களை கொடுத்து பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதி கிடைப்பதற்கு வழிசமைக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கிடைப்பதற்கு தொப்புள் கொடி உறவுகளாக நாம் எப்போதும் இறுக கைப்பற்றி தோளோடு தோள் நிற்போம். அறம் வெல்லும். வெல்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


செம்மணியில் மண் மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதற்கு வந்த குழு

செம்மணியில் மண் மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதற்கு வந்த குழு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முல்லைத்தீவு

03 Oct, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Montargis, France

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
மரண அறிவித்தல்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், நெடுந்தீவு, Norbury, United Kingdom

03 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
நன்றி நவிலல்

யாழ் நயினாதீவு 5ம் வட்டாரம், Jaffna, Markham, Canada

02 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, London, United Kingdom

27 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Edgware, United Kingdom

03 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், காங்கேசன்துறை, அளவெட்டி வடக்கு, சிட்னி, Australia

02 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, வேலணை கிழக்கு, கொழும்பு

23 Sep, 2015
மரண அறிவித்தல்
33ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொடிகாமம்

06 Oct, 1992
மரண அறிவித்தல்

Vasavilan, London, United Kingdom

30 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, நாவற்காடு

13 Oct, 2013
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 9ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு

12 Oct, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் மேற்கு, Noisiel, France

23 Sep, 2025