சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து வீழ்ந்தன (காணொளி)
China
Earthquake
By Sumithiran
சீனாவின் வடமேற்கு பகுதியில் நேற்று நள்ளிரவு ரிக்டர் அளவுகோலில் 7. 2இல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 06 பேர் காயமடைந்ததுடன் 120 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.
சீனா - கிர்கிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள அக்சு மாகாணத்தில் உள்ள உச்சூர்பன் கவுண்டியில் அதிகாலை 2 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன பூகம்ப வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது.
மீட்புப்படையினர் அனுப்பிவைப்பு
சுமார் 200 மீட்புப்படையினர் நிலநடுக்க மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்திய தலைநகர் டெல்லி முதல் பாகிஸ்தானிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து வீழ்ந்தன
காயமடைந்த ஆறு பேரில், இருவர் பலத்த காயம் அடைந்தனர், நான்கு பேர் சிறுவர்கள். 47 வீடுகள் இடிந்து விழுந்தன, 78 வீடுகள் பகுதயளவில் சேதமடைந்துள்ளன விவசாய கட்டமைப்புகள் இடிந்து விழுந்தன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி