தமிழகத்தை உலுக்கிய கரூர் சம்பவம்: சீனா தரப்பில் இரங்கல்
தமிழக வெற்றிக்கழகத்தின் பிரசார கூட்டத்தில் உயிரிழந்த மக்களுக்கு சீனா (China) இரங்கல் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் பிரசார கூட்டம் இடம்பெற்றது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சீனா இரங்கல்
இந்தநிலையில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கரூர் இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்கில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “உயிரிழந்தவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மனமார்ந்த ஆறுதல்
அத்தோடு அவர்களது குடும்பங்களுக்கும் மற்றும் காயமடைந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்தியாவில் உள்ள சீனத் தூதரகமும் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளதாகவும் மற்றும் உயிரிழந்தவர்களில் சீன நாட்டவர் யாரும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவுக்கான சீனத் தூதர் ஸூ ஃபெய்போங், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
